என் மனதில் திடீரென எழும்பியன சில கேழ்விகள்:
- அப்படி இவர் சொன்ன இந்த வரி அவர் நண்பர்களை பற்றி நல்ல இமேஜ் உருவாக்குவதற்காகவா? அல்லது அவர்களை பற்றி தவறாக பெசுவதர்க்காகவா?
- குடி போதையில் மட்டுமே வெளிப்படையாக பேசும் ஒரு நபர், மற்ற நேரத்தில் வெளிப்படையாக பேச தயங்குவாரா? ஏன்? தையிரியக்குரைவினாலா?
- குடி போதை இல்லையினில், தன் நண்பரிடம் ஒரு சின்ன தயக்கமும் இல்லாமல் முகத்தை பார்த்து 'டே நீ சொன்ன அந்த விஷயம் எனக்கு பிடிக்கலை' என்று சொல்ல முடியுமா? முடியாது. அதை குடி போதையில் மட்டுமே சொல்லுவார்கள்.
- இப்படி நேருக்கு நேர் முகத்தை பார்த்து பேச முடியாத இந்த உறவு, உண்மையில் நட்பா?
நான் பார்த்த இந்த சிறு உலகத்தில், குடி ஒருவனுக்குள் ஒளிந்திருக்கும் மனிதனை வெளிப்படுத்தும் என பார்த்திருக்கிறேன். சாதுவின் போல் மற்ற நேரத்தில் இருப்பவன், குடி போதையில் தன் நண்பனை ரத்தம் காக்கவைத்து 'இது பாசம் டா' என சொல்பது பார்த்திருக்கிறேன். காலையில் தன் அலுவலகத்தில் 'மிகச்சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்' என்ற பட்டதை கொண்டு, ராத்திரியில், குடி போதையில் மிருகமாய் மாறி தன் மனைவியை கொளுத்த போனவரையும் பார்த்திருக்கிறேன்.
இது எப்பேர் பட்ட பாசம்? எந்த விதத்தில் இது நட்பாகும்? குடிப்பதின் மூலம் நல்ல மனிதன் வெளி வருகிறானா, ஒரு நல்ல நண்பன் கிடைக்கிரானா? அப்படி எதுவும் தெரியலையே!
குடிப்பதின் மூலம் 'முதல் முறையாக பேசும்' தயக்கம் பெரியளவில் போய்விடும் எனபது உண்மை. இதனால் சுமையின்றி பேசலாம், ஆனால் அதை 'நட்பு' என்று நினைத்துக்கொள்வது தவறு. ஏன் என்றால், தயக்கமின்றி தன் உணர்வுகளை வெளிப்படுத்த முடிவது நட்பின் அடிப்படை ஆகும். இந்த அடிப்படை இல்லையினில், நட்பு இல்லை. அது வெறும் வெளி வேஷம் தான்!
நான் இதுவெல்லாம் அவரிடம் சொல்லவில்லை, ஏனென்றால், இன்னும் எங்கள் மத்தியில் நட்பு இல்லை. குடியின் அடிப்படையில் நட்பை ஆரம்பிக்க நான் மறுக்கிறேன்... காலையில் அவரிடம் இதை முகத்தில் பார்த்து சொல்ல நான் தயார். நட்பா, இல்லையா என்று காலையில் தெரிந்து விடும்...
நீங்கள் எப்படி?

1 comment:
nee thaanda mokka saamy..! Unakku ethir blog naan adikerean..mudinja mothippar..!
Post a Comment